காஸா யுத்தத்தை எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கும் முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்திருந்த வழக்கு ஒன்றில் துருக்கி தன்னையும் இணைத்துக்கொண்டு, இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என்று குற்றம்சாட்டி இருந்தது,
இந்த நிலையில், காஸா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரானது என்றும் அந்தக் குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் உள்ளிட்ட 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்தான்புல் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கான பட்டியலில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ், ராணுவ தலைமை லெப்டினண்ட் ஜெனரல் இயால் ஜமீர் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளன. துருக்கியின் இந்த அறிவிப்பிற்கு ஹமாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு, இது விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு நாடகம் என விமர்சித்துள்ளது.
