சென்னையை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டில் 300-க்கும் மேற்பட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும். குழியுமாக உள்ளதால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கொசுக்கள் அதிகளவு பெருகி பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாதிக்கபட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலையை சீரமைக்கவும். கால்வாய்களை தரமாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி மாபெரும் கையெழுத்து இயக்க பிரச்சாரம் மேற்கொண்டனர்.
