பாமக இருதரப்பு நிர்வாகிகள் மோதல் – அருள் MLA-வை தாக்க முயற்சி

கும்பகோணத்தில் பாமகவின் ராமதாஸ் ஆதரவாளர்களும், அன்புமணியின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று பாமகவின் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் வந்திருந்தார். அவர் கும்பகோணம் புறவழிச்சாலையில், காரில் வரும்போது, அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகள் சிலர், காரை மறித்து முழக்கமிட்டனர்.
ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ அருள் கார் மீதும், தாக்குதல் நடத்த முற்பட்டனர். அப்போது, போலீஸார் தடுத்து நிறுத்தி, இருதரப்பையும் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.

Exit mobile version