முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியன் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த போதும், சட்டப்பேரவையில் அவர் அதிமுக உறுப்பினராகவே நீடித்து வந்தார்.
தற்போது திமுகவில் இணைந்ததால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்து, மனோஜ் பாண்டியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் இணைவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்து விட்டதாகவும், அவர் மீது எப்போதும் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே, மனோஜ் பாண்டியனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
















