ஸ்டாலினுக்கு தமிழ் மீது உதட்டுப்பற்று! – அண்ணாமலை விமர்சனம்

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் திறக்கப்பட்டதை தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் திமுக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அதனால் தான், தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சருக்கு, அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட உரைக்கவில்லை. இனியாவது, வெறும் உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி, முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Exit mobile version