தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில், இன்று காலை நிகழ்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்- பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில், தெலங்கானா அரசுக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. மிரியாலகுடா என்ற இடத்தருகே பேருந்து செல்லும்போது, ஜல்லி பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் பேருந்து முற்றிலும் உருக்குலைந்தது. அதாவது, பேருந்தை முந்தி செல்ல முற்பட்டபோது, அதிக பாரம் ஏற்றி வந்த காரணத்தால், லாரி பேருந்து மீது கவிழ்ந்ததாக தெரிகிறது.
பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததில், 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
