மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 40 புள்ளி 5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரிட்ஸ் 101 ரன்களை எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா மகளிர் அணி அபார வெற்றி
