அறிக்கை போரைத் தொடங்கியது த வெ க – கட்சியினருக்கு விஜய் வலியுறுத்தல்

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க-வின் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து உணர்ந்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய அடிமை, பழைய அடிமை என்றெல்லாம் பூடகமாக பேசி, யார் மீதோ கல்லெறிவதாக நினைத்து முதலமைச்சர் களிப்புறுகிறார். குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி. முதல் அடிமையாக இருந்து, தமிழ்நாட்டில் தாமரை மலருக்குத் தரிசனம் செய்தவர்கள் என்று திமுக-வை விஜய் விமர்சித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகவில்லை என்றால், அவர்களின் வாக்குரிமை உறுதியாக த.வெ.க-வினர் உதவிட வேண்டும். புதிய வாக்காளர்களில் ஒருவர் பெயர் கூட விடுபடாமல், பார்த்து பார்த்து சேர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாக்கும் நமக்கு முக்கிய பொக்கிஷம், அந்த வாக்குகள் அனைத்தும் த.வெ.க-விற்கு ஒதுக்கப்படும் சின்னத்திற்கானது என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version