திருமாவளவனை குறிவைக்கும் சாதி-மதவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. –
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட சென்னை கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, திருமாவளவனுக்கு எதிராக சமூக பதட்டம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
















