ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாலேயே, மத்திய அரசு அதற்கான நிதியை நிறுத்திவைத்துள்ளதாக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த திட்டத்திற்கான நிதி நிலுவையில் உள்ளது எனக் கேட்டால், தமிழக அரசு அதை தர மறுப்பதாக கூறினார். ஆனால், மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி தரவில்லை என்று செல்லும் இடங்களில் எல்லாம் சொல்கிறார்கள், அதன் விவரங்களை கேட்டால் தர மறுக்கிறார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
 
			
















