இப்போ யாரும் இசையமைப்பது இல்ல..வெறும் சவுண்ட் தான் – வைரமுத்து

தமிழக இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரும் பாடல்களில் பிற மொழி வார்த்தைகளுக்கு இடையில் தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். இசை என்பது தற்போது ஓசை ஆகி விட்டது. இது மிகப்பெரிய ஆபத்து என்றும் கூறினார்.

ஒரு படத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பது படம் சார்ந்து தான். மொழி சார்ந்து அல்ல என்றும் அவர் தெரிவித்தார். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

Exit mobile version