சீனாவில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் போட்டியில் தங்கம் சென்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை தீக்சாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சீனாவில் கடந்த வாரம் 17 மற்றும் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்சா 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அவரை இன்று நேரில் அழைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
 
			















