வட கிழக்கு பருவமழையின் போது மக்களுடன் திமுக நிற்கிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், இப்பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருப்பதை சுட்டிக்காட்டினார். சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடிந்திருந்தாலும், சில இடங்களில் தேங்கியுள்ளது. அந்த இடங்களை, மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
