215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும்போது, கிலோ மீட்டருக்கு, ஒரு பைசா கூடுதலாக வசூலிக்கப்படும். அதேநேரத்தில், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு, கிலோ மீட்டருக்கு, 2 பைசா கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்.
எனவே, ஏ.சி அல்லாத வகுப்பில் 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்பவர்களுக்கு, கட்டண உயர்வு என்பது 10 ரூபாயாக இருக்கும். அதே நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள், மாதாந்திர சீசன் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை.
டிசம்பர் 26 மற்றும் அதற்கு பின்பு பயணிக்க, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயண சீட்டுகளுக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. டிசம்பர் 26 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்படும் பயண சீட்டுகளுக்கு, கட்டணம் உயர்வு பொருந்தும் என்று, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.














