திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முன்னிட்டு டிசம்பர் 3-ஆம் தேதி இரவு நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கும், 4ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவண்ணாமலைக்கு சர்குலர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. அதன்படி காலை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி வழியாக திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை மாலை வந்தடையும்.
விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்.
