ஆட்சியில் பங்கு குறித்து திருமாவளவன் பரபரப்பு கருத்து

ஆட்சியில் பங்கு என்ற விசிக-வின் விருப்பத்தை, அதற்கான நேரம் வரும்போது பேசுவோம் என்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் இதனை தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடப்பதாகவும், ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை என்றார்.

சில விவகாரங்களை முன்கூட்டியே பேசிவிட முடியாது என்றும், தகுந்த சூழல் வரும்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரக்கோரி வலியுறுத்துவோம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

Exit mobile version