கிராமங்களில் உள்ள தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்கும் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிப்பெயர்களை நீக்கும் அரசாணையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளதாகவும், இதில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வது கீழ்த்தரமான செயல் எனக் குறிப்பிட்டார்.
அரசாணையில் இடம்பெற்றுள்ள பெயர்களை மட்டுமே வைக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்றும், அந்தந்த பகுதிகளில் பிரபலமான தலைவர்கள் பெயரையும் பரிந்துரை செய்து அனுப்பலாம் என்றும், தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.