பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தான்

பீகார் மாநிலத்தில் ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் என்றும், தொகுதிப்பங்கீடு நிறைவடைந்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ், ஆர்.ஜே.டி, மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையே இன்னமும் தொகுதிப்பங்கீடு முடிவடையவில்லை. இந்தநிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்தான் என்றும், தொகுதிப்பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை, விரைவில் முடிவடையும் என்றும்கூறினார்.

Exit mobile version