சென்னை கண்ணகி நகர் பகுதியில், சாலைகளில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கண்ணகி நகர்- எழில் நகரை இணைக்கும் கோகிலாம்பாள் நகர் பிரதான சாலை, மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையையும், மழைநீர் வடிகாலையும் தமிழிசை சௌந்தரராஜன், நேரில் பார்வையிட்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். ஆனால், அதைப்பற்றி அரசாங்கம் கவலைப்படுவதில்லை என்றார். இந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும், மழைநீர் தேங்கியிருப்பது தான் காரணம் என்றும், தமிழிசை குறிப்பிட்டார்.
















