மோசமான வானிலை காரணமாக இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து, இலங்கையின் காங்கேசன்துறைக்கு, தனியார் நிறுவனம் சார்பில், பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக நாளை முதல் 28 ஆம் தேதி வரை இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பின்னர் டிசம்பர் மாதம் முதல், வழக்கம்போல், பயணிகள் கப்பல் சேவைகள் தொடரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
