ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனு தொடர்பாக, அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், அமலாகத்துறை அதிகாரி முன்பு ஆஜராகுவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என்று, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிப்பட்டது.
அப்போது சில நேரங்களில் கிடைக்கும் புது தகவல்களை வைத்து, விசாரணை அதிகாரி விசாரணை நடத்த வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே அனைத்து தரப்பு விவகாரங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக அமலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான நிலை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
