பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் கட்டுப்பாட்டில் உள்ளது – ராஜ்நாத் எச்சரிக்கை

புதிதாக ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணைகளை, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அவருடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.

அப்போது பேசிய ராஜ்நாத்சிங், ஆபரேஷன் சிந்தூர் இந்தியர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், உலகிற்கு பிரம்மோஸின் செயல்திறனை நிரூபித்துகாட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா தனது கனவுகளை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையை பிரம்மோஸ் வலுப்படுத்தியுள்ளதாகவும், இந்த நம்பிக்கையை பராமரிப்பது அனைவரது கூட்டுப்பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளதாகவும், ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர் தான் என்றும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

Exit mobile version