குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கேரளாவில் 4 நாள் பயணமாக நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். இரவு அங்கு தங்கியிருந்த அவர், காலையில் ஹெலிக்காப்டர் மூலம், சபரி மலைக்கு சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள பிரம்மாதம் என்ற இடத்தில், ஹெலிக்காப்டர் தரையிறங்கியது. அவரை கேரள அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம், பம்பைக்கு புறப்பட்டார். பம்பையில் உள்ள கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானத்திற்குச் சென்றார். அங்கு 18 படிகள் வழியாக ஏறிச் சென்று ஐயப்பனை வழிபட்டார் குடியரசுத் தலைவர். அவருக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாரம்பரிய முறைப்படி மரியாதை அளிக்கப்பட்டது.
