சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், தர்ணா போராட்டம் நடத்தியதால், சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
பாமக சட்டமன்ற குழுத் தலைவராக, ஜி.கே.மணி நீடிக்கும் நிலையில், பாமகவில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, அதிகாரப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி.கே.மணியை மாற்றக் கோரி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்த மனு மீது, சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி,
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகியோர், இன்று சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக, சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.