பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், மேலும் 40 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு, அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதி எல்லையில் நடைபெற்ற மோதலில், 23 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று எல்லையில் உள்ள கிராமங்கள் வழியாக தலிபான்கள் ஊடுருவி, பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், மேலும் 40 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடிக்கிறது.