3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான உலகின் உயரிய விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேதியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த சுசுமு கிட்டகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம்.யாகி ஆகியோர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வு குழு அறிவித்துள்ளது.

Exit mobile version