நகராட்சி துறையில் பணி நியமனங்களுக்கு, பணம் வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருக்கும் சூழலில், அதனை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மறுத்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையின்போது, சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு, தமிழக போலீசாருக்கு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக போலீசார், அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா? இல்லையா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். இந்த விவகாரத்தில் தாம் எந்தவித தவறும் செய்யவில்லை என்றும், கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
 
			















