சேராத இடம் சேர்ந்தார் செங்கோட்டையன், என்ன பிரச்சனை வந்தாலும் EPS-ஐ விட மாட்டோம் – நைனார்

என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என்று தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பிஜேபி காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றார். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சேராத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே கிடைக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version