ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்துவேன் – உருட்டி பிரட்டி குழப்பியடிக்கும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஆலோசித்த டிரம்ப், நேற்று உக்ரைன் அதிபரை ஜெலன்ஸ்கியை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யாவிடம் இழந்த நிலப்பரப்புகளை உக்ரைன் திரும்பப் பெற வேண்டும் என ஆரம்பத்தில் கூறி வந்த டிரம்ப், தற்போது நிலங்களை ரஷ்யா ஒப்படைக்க வேண்டாம் என்றும், போரை நிறுத்துவதே மக்களுக்கான மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என கூறத்தொடங்கியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி ஆதாரங்களை இந்தியா வழங்கி வருவதாக குற்றம்சாட்டி வரும் டிரம்ப், இனிமேல் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றும், இதுவரை 38 சதவீத எண்ணெய் வாங்கிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version