குழந்தையைக் கடத்த முயன்ற வடமாநிலத்தவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வாயில் பிளாஸ்டிக் கவரை வைத்து, குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வாணியம்பாடி அருகே சின்னமோட்டூர் கிராமத்தில் குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. இதனை நோட்டமிட்ட வடமாநில இளைஞர் ஒருவர், குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் கவரை வைத்து அடைத்து கத்தவிடாமல் செய்து கடத்த முயன்றுள்ளான். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவனை மடக்கிப் பிடித்து குழந்தை மீட்டதோடு, மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த வடமாநில இளைஞர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version