கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
கரூர் சென்றிருந்த அவர், கூட்ட நெரிசல் சிக்கி பலியான 41 பேரில் 8 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தனது சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கிய கமல்ஹாசன், இன்னும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மௌரியா ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது, இந்த விவகாரத்தில், நாம் அனைவரும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், கரூர் ரவுண்டானா பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தால், ஏராளமான மக்கள் ஆற்றிற்குள் விழும் சூழல் ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.