கமல் படத்தை வைக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனின் புகைப்படத்தையோ, பெயரையோ அனுமதியின்றி யாரும் பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது புகைப்படம் மற்றும் தன்னுடைய பெயர், குரல், உலக நாயகன் என்ற பட்டத்தை அனுமதியின்றி, வணிக நோக்கங்களுக்கான யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், அதுபோன்று பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். “நீயே விடை” என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Exit mobile version