சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின், அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஜீரோ கார்பன் வெளியேற்றம் என்கின்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார்.
இதில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த மாணவர்கள், தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். குறிப்பாக இலையில் இருந்து பேப்பர் தயாரிப்பது, வாழை நாறிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, மரத்திலிருந்து செயற்கையான பூக்களை உருவாக்குவது என பல்வேறு வகையான தயாரிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
 
			















