டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான முயற்சியில், மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பது, வாகனப் புகை என பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, டெல்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, டெல்லியில் ஐந்து இடங்களில் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, ஐ.ஐ.டி தொழில் நுட்ப குழுவினர், விமானத்தில் பறந்து சென்று, செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 29-ந்தேதி, 5 இடங்களில் மழை பெய்ய வைக்கப்படும் என்றும், நிபுணர்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காற்றுமாசு அதிகரிப்பு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்க நடவடிக்கை
