ஒரு லட்சத்தை நெருங்கியது – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.99,680

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்றும் புதிய உச்சம் பெற்று, ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது.

பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, தினசரி தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், நகை வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம், 12 ஆயிரத்து 460 ரூபாயாகவும், ஒரு சவரன் 99 ஆயிரத்து 680 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 213 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version