ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரன் 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்ததால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது. இன்று காலை 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து சவரன் 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை மாலையில் சவரன் ஆயிரத்து 280 ரூபாய் குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாயாகவும் உள்ளது. தங்கம் விலை ஒரே நாளில் 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்துள்ளது தங்கம் வாங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
















