இன்று இரண்டு முறை விலையுயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,560

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று இருமுறை விலை உயர்ந்து, சவரன் 90 ஆயிரத்து 560 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

அதாவது காலையில் கிராமுக்கு 70 ரூபாயும், மாலையிலும் அதேபோல 70 ரூபாய் என 140 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 320 ரூபாயாக உள்ளது. இதேபோல, சவரனுக்கு காலையில் உயர்ந்ததுபோல, மாலையும் 560 ரூபாய் அதிகரித்து, 90 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் 164 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version