திருச்சி மாவட்டம் துறையூரில் 6 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை, ஏராளமான பொதுமக்கள் ஆச்சரித்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
துறையூர் தீரன் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்த ஆடு ஒன்று, 6 கால்களுடன் ஒரு குட்டியை ஈன்றது. தற்போது இந்த குட்டி, மற்ற ஆடுகளை போலவே சகஜமாக புற்களை மேய்ந்து, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது.
இயற்கைக்கு மாறாக 6 கால்களுடன் பிறந்த இந்த அதிசய ஆட்டுக் குட்டியை, அக்கம் பக்கத்திலிருந்து வந்து பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
 
			















