சினிமா காட்சிகளை விஞ்சிய விமான விபத்து

வெனிசுலாவில் சிறிய ரக விமானம், விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர்.

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தில் உள்ள பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து, சிறிய ரக விமானம் புறப்பட்டது. ஓடுதளத்தை விட்டு புறப்பட்டு மேலே பறந்த சில நொடிகளில், அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version