இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அதிக கடன் வாங்கியதுதான் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்ல்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கான நாட்கள், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகள், தங்களது கூட்டணிக்கு வரலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
















