அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் இபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் திரண்டிருந்த மக்களிடையே தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, திமுக ஆட்சியில் தமிழகத்தில் கொலை-கொள்ளை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக குறைகூறினார். கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று சொன்ன திமுக, அதைச் செய்யவில்லை என்றார்.

ஆனால், தற்போது மத்திய அரசு அந்தத் திட்டத்தின் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரித்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று தவறான தகவலை மக்களிடையே பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும், 125 நாள் வேலை திட்டம் என்பது, 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version