கோவையில் உணவு தேடி வந்த காட்டு யானை, வௌ¢ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் நுழைந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுயம்புவாக தோன்றிய சிவனை, பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். நேற்று விஜயதசமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

அப்போது, உணவு தேடி அங்கு வந்த காட்டு யானை, திடீரென கோவிலுக்குள் புகுந்தது. இதனை பார்த்த பக்தர்கள், அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.