எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா? அதிகாரிகளை ஏவிய முதல்வர்

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்படுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது பற்றியும், நெல் கொள்முதல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Exit mobile version