வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பிஜேபி, காங்கிரஸ், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேசமயம், அதிமுகவும், பிஜேபியும் அதை வரவேற்றன.
















