சென்னையை அடுத்த பம்மலில், சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பம்மல் நாகல்கேணி பிரதான சாலையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பாரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.