தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறை வெடித்து, கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
தெலங்கானா மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துப் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தெலங்கானாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
















