டிசம்பர் 15-ல் ஐபிஎல் மினி ஏலம்? CSK-வில் அஷ்வினுக்கு பதில் யார்?

அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 19-வது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளதாக, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மினி ஏலமாகவே இருக்கும் என்பதால், வெளிநாடுகளில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பிற்கு, அனைத்து அணிகளுக்கும் நவம்பர் 15-ம் தேதிவரை கெடு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில், கடைசி இரண்டு இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே பெருமளவிலான மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கான 9 கோடியே 75 லட்ச ரூபாய் தொகையுடன் சென்னை அணி ஏலத்தை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version