TR பாலுவை அண்ணாமலையே குறுக்கு விசாரணை செய்ய போகிறார் – மக்கள் வெயிட்டிங்

அவதூறு வழக்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை தானே நேரில் குறுக்கு விசாரணை நடத்த அண்ணாமலை அனுமதிகோரிய நிலையில், விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அண்ணாமலை, டி.ஆர்.பாலு ஆகியோர் நெரில் ஆஜரானார்கள். அப்போது, பாலுவிடம், அண்ணாமலையின் வழக்கறிஞர் பால் கனகராஜ் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, அடுத்த விசாரணையின்போது, அண்ணாமலையே குறுக்கு விசாரணை செய்வார் என அவர் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கரூர் சம்வபத்தில் சிபிஐ நேர்மையான விசாரணை நடத்தி, இதில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version