உச்சநீதிமன்ற வளாகத்தில் போட்டுடைத்த ஆதவ் அர்ஜுன்!

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், காவல்துறையின் பொறுப்பற்ற செயல், மிக முக்கியமானது என்று, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான உடன், டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் இதுவரை இல்லாத எழுச்சி விஜயின் பிரச்சாரத்தில் இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் விஜயின் பிரச்சாரத்தின் போது காவல்துறையினர் ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால், கரூர் காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன், கலவரம் நிகழ்ந்து விடும் என்று கூறி, போலீஸார் தான் தங்களை வெளியேற்றினார்கள் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version