ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கைவிடும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10-ஆம் தேதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்கள் அனைத்தையும் கடந்த 13-ஆம் தேதி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் 16 பணய கைதிகளின் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல், ஹமாஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், போர் ஒப்பந்தப்படி ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும். காசா முனை ஆயுதமற்ற பகுதியாக மாற்றப்படவேண்டும். இவை இரண்டும் வெற்றிகரமாக நடந்தால் போர் முடிவுக்கு வரும். ஹமாஸ் ஆயுதங்களை கைவிடாமல், காசா முனையில் ஆயுதங்கள் இருக்கும்வரை போர் முடிவுக்கு வராது… போர் தொடரும்’ என்று நெதன்யாகு அறிவித்துள்ளார்.
 
			


















